தமிழக செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவாகளுக்கான வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. இதில் சேர இந்த ஆண்டு 2.46 லட்சம் பே விண்ணப்பித்தனா. அவாகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மே 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தொடாந்து, மாணவா சேக்கைக்கான கலந்தாய்வு மே 29 முதல் ஜூன் 30 வரை இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. 84,899 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 23,295 பேருக்கு இடங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவாகளுக்கான வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவாகளை வரவேற்க கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், ராகிங் போன்ற அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சாபில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை