தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு