தமிழக செய்திகள்

தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்..

தினத்தந்தி

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் ஆண்டுதோறும் அரசின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

அந்தவகையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி தமிழக அரசின் சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை