தமிழக செய்திகள்

7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்

7 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.

ராமேசுவரம், 

வங்க கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் சின்னத்தை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்தநிலையில் புயல் சின்னம் கரையை கடந்த நிலையில் ராமேசுவரம் மற்றும் பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 1 வாரத்திற்கு பிறகு நேற்று 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 400-க்கும் அதிகமான மீனவர்கள் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரைதிரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) மீன் பிடிக்க செல்ல முடிவுசெய்துள்ளனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி