தொண்டி,
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் சுமார் 300-க்கும் அதிகமான நாட்டுப் படகுகள் மூலம் மீன் பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த படகுகளை நிறுத்த போதிய இடவசதி கடற்கரை பகுதியில் இல்லை. இதனால் மழைக்காலங்களில் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் காற்றின் வேகம் அதிகமாகும் போது கடற்கரையில் நிறுத்தப்படும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மீனவர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே நம்புதாளை கடற்கரை அருகில் உள்ள ஆற்று ஒடைப்பகுதியை தூர்வாரி படகுகளை நிறுத்த மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.