தமிழக செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தினத்தந்தி

சேதுபாவாசத்திரம்;

மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

விசைப்படகுகள்

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டிணம், கணேசபுரம் உள்பட 32- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டு படகுகளும், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகளும் உள்ளன.

10 ஆயிரம் மீனவர்கள்

விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களிலும் பிற தினங்களில் நாட்டுப் படகுகளும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வள துறை உதவி இயக்குநர் சிவக்குமார் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்