தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரியில் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்ல.

தினத்தந்தி

கன்னியாகுமரியில் புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்ல.

மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. இந்தநிலையில் வங்க கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

இதுபோல் கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வள்ளங்கள் அனைத்தும் தினமும் அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு மாலையில் கரைக்கு திரும்புவது வழக்கம்.

புயல் எச்சரிக்கை

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைதொடர்ந்து நேற்று கன்னியாகுமரி, கோவளம், வாவத்துறை, ஆரோக்கியபுரம் போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், அவர்கள் தங்களது வள்ளங்கள், கட்டுமரங்களை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சந்தைகளில் மீன்வரத்து அடியோடு நின்றது. இதனால் கடற்கரை பகுதிகளில் உள்ள மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு