தமிழக செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கொடியேற்று விழா

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கொடியேற்று விழா நடந்தது

தினத்தந்தி

சிவகங்கை

மே தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக சிவகங்கையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன் கொடியேற்றினார். தொடர்ந்து காமராஜர் சாலை ஆட்டோ சங்கம், பஸ் நிலைய பழ வியாபாரிகள் சங்கம், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம், டாஸ்மாக் சுமை இறக்கும் தொழிலாளர்கள் சங்கம், அரண்மணை வாசல் ஆட்டோ சங்கம், சிவகங்கை மருத்துவ கல்லூரி ஆட்டோ சங்கம், நேரு பஜார் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பெண்கள் ஆட்டோ சங்கம் ஆகிய இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்டு சிவகங்கை நகர செயலாளர் மருது, நகர துணை செயலாளர்கள் சகாயம், பாண்டி, ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நகர செயலாளர் பாண்டி, இளைஞர் நகர செயலாளர் முத்துக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் கங்கை சேகரன், மாதர் சங்க நிர்வாகி குஞ்சரம் காசிநாதன், கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சின்னக்கருப்பு, முருகன், டாஸ்மாக் விற்பனையாளர் சங்க நிர்வாகி தாளமுத்து, ரவி, நகர் குழு நிர்வாகிகள் பொன்னையா, அமிர்தசாமி, மருதுபாண்டி அண்ணாமலை நகர் கிளை செயலாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு