தமிழக செய்திகள்

சென்னையில் இருந்து மதுரை, டெல்லி செல்ல வேண்டிய விமானங்கள் 2½ மணி நேரம் தாமதம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 140 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் காலை 11 மணிக்கு வந்தது. மீண்டும் அந்த விமானம் மதுரைக்கு காலை 11.45 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் மதுரை செல்ல வேண்டிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 140 பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் 2.10 மணிக்கு அந்த விமானம் மதுரை புறப்பட்டு சென்றது.

இதேபோல் பகல் 12.55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானமும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக மாலை 3.45 மணிக்கு மேல் புறப்பட்டு சென்றது. மதுரை, டெல்லி செல்ல வேண்டிய 2 ஏர்இந்தியா விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிக்குள்ளானார்கள். விமானம் தாமதத்துக்கான காரணம் குறித்து, ஏர் இந்தியா நிறுவனமோ, சென்னை விமான நிலைய அதிகாரிகளோ எதுவும் கூறவில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை