தமிழக செய்திகள்

கொசஸ்தலை ஆற்றங்கரை கிராமங்களில் வெள்ள பாதிப்பு - அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள வெள்ளிவாயல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும் வயல் வெளிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொன்னி, சீரக சம்பா உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டார்.

தண்ணீர் தேங்கியுள்ளதால் கிராமத்திற்குள் கார் செல்ல முடியாததால், அமைச்சர் நாசர் தன்னுடன் வந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் டிராக்டரில் ஏறி கிராமத்திற்குள் சென்றார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், கொசஸ்தலை ஆற்றங்கரை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்