தமிழக செய்திகள்

வெள்ள பாதிப்பு நடவடிக்கைகள் - அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து 108 ஆம்புலன்சுகளும் அருகில் இருக்கும் காவல்நிலையங்களுடன் தொடர்பில் இருந்து, வெள்ள பாதிப்பு இடங்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்திட தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள், கிராமப்புற, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து இருப்பு உள்ளதா என்பதையும், மின்சாரம் மற்றும் ஜனரேட்டர் வசதிகள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் அவசரகால சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்