தமிழக செய்திகள்

கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஓசூர்:

கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1,600 கனஅடி தண்ணீர் வந்தது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக, நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர பகுதிகளான பெத்தகுல்லு, சின்னகுல்லு, முத்தாலி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து