கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 29). கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிகிறார்.
இவருக்கும் பரசேரியை சேர்ந்த பட்டதாரி பெண் ராஜஸ்ரீ( 23) என்பவருக்கும் கடந்த நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக நாட்கள் சென்ற நிலையில் டிசம்பர் 9-ம் தேதி முதல், வேல்முருகன் பணிக்கு செல்லத் தெடங்கினார். டிசம்பர் 16-ம் தேதி மாலை வேல்முருகன் வீடு திரும்பிய பேது ராஜஸ்ரீ வீட்டில் இல்லை. அவர் வீட்டைவிட்டு வெளியேறும் பேது 11 சவரன் மதிப்புள்ள தாலி சங்கிலியைக் கழற்றிவைத்து விட்டு 70 சவரன் நகைகள், 10,000 ரூபாய் மற்றும் 2 செல்பேன்களுடன் சென்றதாகக் கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்திலும், மாமனார் வீட்டிலும் வேல்முருகன் தேடிய பேது அங்கும் இல்லை. இதையடுத்து வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் வேல்முருகன் தனது மனைவியைக் காணவில்லை என புகாரளித்தார்.பேலீசார் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின. ராஜஸ்ரீயின் பக்கத்து வீட்டில் வசித்தவர் இளைஞர் சந்தேஷ். வேலையில்லாமல் திரிந்து கெண்டிருந்த சந்தேஷை, ராஜஸ்ரீ பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜஸ்ரீ மாயமானதும் சந்தேகத்தின் பேரில் சந்தேஷ் பற்றி பேலீசார் விசாரித்த பேது அவரும் காணாமல் பேயிருந்தது தெரியவந்தது.
ஆனால் வீட்டில் தனக்கு பேலீஸ் வேலை கிடைத்திருப்பதாகவும் அதனால் வெளியூர் சென்று வருவதாகவும் செல்லிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சந்தேஷின் நண்பரான கேபு என்பவர் பெங்களூருவில் இருப்பதால் அவரைத் தெடர்பு கெண்டு பேலீசார் விசாரித்தனர். சந்தேஷும், ராஜஸ்ரீயும் தனது அறைக்கு வந்ததாகவும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்தேஷுக்கு அதிகளவில் கடன் இருப்பதால் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு தனது மகளைக் கடத்திச் சென்றிருப்பதாக புதுப்பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, தனது மகன் ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற அவமானம் தாங்க முடியாமல் சந்தேஷின் தந்தை ஜெகதீஷ், சனிக்கிழமை அன்று விஷமருந்தி தற்கெலை செய்து கெண்டார்.
இதுகுறித்து இரணியல் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.