தமிழக செய்திகள்

கோயம்பேடு பூக்கள் மற்றும் பழச் சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம்-சிஎம்டிஏ

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:- கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும், பொதுமக்கள் சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்படும். நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழச் சந்தை இயங்கும் என்றார்.

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் வருவதற்கு வரத் தடை உள்ளிட்ட மேற்கண்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்