தமிழக செய்திகள்

முகூர்த்த தினம்; பூக்கள் விலை உயர்வு - மதுரையில் மல்லிகை கிலோ ரூ.1,000 வரை விற்பனை

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய தினம் மல்லிகைப்பூவின் விலை கிலோவுக்கு 600 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், இன்று 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதே போல் முல்லை மற்றும் பிச்சிப் பூக்கள் கிலோ 500 ரூபாய்க்கும், சம்மங்கி, பட்டன் ரோஸ் பூக்கள் கிலோ 150 ரூபாய்க்கும், செண்டு மல்லி 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை