தமிழக செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தோவாளையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அழகியபாண்டியபுரம்:

தோவாளையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை சிற்றுண்டி வேலையை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க கேட்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கேட்டும், தேர்தல் வாக்குறுதியில் கூறிய சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க கேட்பது உள்ளிட்ட 3 அம்ச கோக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பென் பாக்கிய தீபா தலைமை தாங்கினார். இதில் தோவாளை ஒன்றிய பொறுப்பாளர் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...