தமிழக செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் செபஸ்தியாள் என்ற ஜெயா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லட்சுமி வரவேற்று பேசினார். துணைத்தலைவர் சுப்பிரமணியன், வீரபாண்டி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் சேர்ந்து சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சங்க இணை செயலாளர்கள் மருதுபாண்டி, சண்முகசுந்தரி, துணைத்தலைவர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு