தமிழக செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கந்தசாமி, மாவட்ட இணை செயலாளர் பாண்டிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்க கூடாது என்றும், அதனை சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் தலைவர் குப்பான் உள்பட சங்க நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரி நன்றி கூறினார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு