ஆர்.கே. நகர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தமிழக மக்களின் எண்ணம் வெளிப்படும் வகையில் ஆர்.கே. நகர் மக்கள் செயல்பட்டுள்ளனர் என கூறினார்.
தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் தினகரனுக்கு நடிகர் ராதாரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 200 ஆண்டுகள் ஆனாலும் பாரதீய ஜனதா கட்சியால் காலூன்ற முடியாது.
ஆர்.கே. நகரில் நடிகர் விஷாலை போலவே பாரதீய ஜனதா எடுத்துள்ள முடிவும் தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.