தமிழக செய்திகள்

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

செங்கல்பட்டு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

தினத்தந்தி

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் கரூர் வைசியா ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் சத்தம் கேட்க தொடங்கியதை தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குற்றவாளியின் தடயங்களையும் சேகரித்து சென்றனர்.

ரூபாய் தப்பியது

ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்கும்போது அலாரம் சத்தம் காரணமாக பல லட்சம் ரூபாய் தப்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே வில்லியம்பாக்கத்தில் உள்ள கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு