தமிழக செய்திகள்

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன்

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தினத்தந்தி

சென்னை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் என கூறினார்

சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் வெளியிட்டு உள்ள தகவலில்

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் உள்ளன

வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தனி அறையில் வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள் சுகாதார துறை உதவியுடன் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறிப்பட்டு வருகின்றன என கூறப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து