சென்னை,
மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர் என சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான நேரடி கலந்தாய்வும், தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும் ஏற்கனவே நடந்து முடிந்து இருக்கிறது.
இந்த நிலையில் என்ஜினீயரிங் ஆன்லைன் பொது கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. கடந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வு இன்று தொடங்கி, 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 29-ந் தேதி துணை கலந்தாவு நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் யார் யார்? கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான கால அட்டவணை கடந்த மாதம் 30-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு www.tndte.gov.in, www.tneaonline.in என்ற இணையதளத்துக்கு சென்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.