சென்னை,
நியூஸ்-7 தொலைக்காட்சி சார்பில் தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து பல்வேறு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.