தமிழக செய்திகள்

பிளஸ்-1 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ. மாதிரி தேர்வு

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ. மாதிரி தேர்வு நடந்தது.

நெல்லை மாவட்டம் நிர்வாகமும், திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள இக்னைட் என்ற மாணவர் அமைப்பும் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் வெற்றி பெறுவது குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளியில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் வெற்றி பெறுவதற்கான மாதிரி தேர்வு நடைபெற்றது.

நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, முதன்மை கல்வி அலுவலர் சின்னையன், தொழில்நுட்ப இயக்குனர் ஆறுமுகநயினார் ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவி லாவண்யா தலைமையில் சுமார் 20 மாணவர்கள் கொண்ட குழுவினர் இந்த தேர்வை நடத்தினர். இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து 294 மாணவர்கள் கலந்து கொண்டு மாதிரி தேர்வு எழுதினர். இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...