சென்னை
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;-
* தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் அதற்கென தனி அமைப்பு ஒன்று வழங்கப்படும்.
* மீன்பதப்படுத்துதலுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை,வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்கற்கும் மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசி போன்ற சிறப்பு விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுக்கும்.
* தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
* தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.
என கூறினார்.