தமிழக செய்திகள்

விளையாட்டு பயிற்சிக்குகபடி வீரர்கள் தேர்வு

தேனி விளையாட்டு பயிற்சிக்கு கபடி வீரர்கள் தேர்வு நடந்தது.

விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கபடி விளையாட்டுக்கான விளையாட்டு இந்தியா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு பள்ளி மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் வீதம் (ஞாயிற்றுக்கிழமை தவிர) 1 ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும். பயிற்சிகளில் பங்கேற்க உடற்திறன் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 101 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 118 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தடகளப் போட்டிகள் நடத்தி சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்