தமிழக செய்திகள்

8-வது முறையாக நளினிக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

8-வது முறையாக நளினிக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

காட்பாடி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி பரோல் வழங்கப்பட்டது.

தன்னுடைய தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் காவலுடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் நளினியின் பரோல் கடந்த மாதம் 7-வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் நளினிக்கு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்