தமிழக செய்திகள்

சட்டசபையில் முதல்முறையாக கேள்வி- பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு..!

கலைவாணர் அரங்கில் 2-ம் நாள் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், அவையை 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்சவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டசபையில் கேள்வி-பதில் நேரம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து