தமிழக செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

சென்னை,

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 உயர்ந்து ரூ.26,168-க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.58 உயர்ந்து ரூ. 3,271க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.3,213க்கு விற்பனை செய்யப்பட்டது.

சவரன் 26,168 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 1 கிராம் 24 காரட் தங்கம் 3,427 ரூபாய் எனவும், 8 கிராம் 27,416 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 41.50 ரூபாய் எனவும், கிலோ 41,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இரண்டே நாளில் ரூ.1000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வங்கி இந்த ஆண்டில் வட்டியைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை