சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாய்க்கு செல்வதற்காக வந்த சென்னை ஆலந்தூரை சேர்ந்த முகமது ஷாருக்கான் (வயது 28) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா. இது தொடர்பாக முகமது ஷாருக்கானை கைது செய்தனர்.