தமிழக செய்திகள்

வெளிமாநில லாட்டரி சீட்டு பறிமுதல்; வாலிபர் கைது

செங்கோட்டையில் வெளிமாநில லாட்டரி சீட்டு வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை பஸ்நிலையத்தில் கேரள பஸ்சில் இருந்து ஒருவர் கீழே இறங்கி சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது ரோந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தனிப்படையினர் அவரை பிடித்து சோதனை செய்தனர்.

இதில் இவர் விற்பனைக்காக கேரளாவில் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சங்கரன்கோவில் அருகே உள்ள கொக்குகுளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண சாமி மகன் கார்த்திக் (வயது 30) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது