தமிழக செய்திகள்

17 ஆட்டோக்களில் தமிழகத்தை சுற்றி வரும் வெளிநாட்டினர் - தூத்துக்குடியில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்னையில் இருந்து தஞ்சாவூர், மதுரை வழியாக 17 ஆட்டோக்களில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 37 பேர் கடந்த மாதம் 28-ந்தேதி தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் சென்னையில் இருந்து தஞ்சாவூர், மதுரை வழியாக 17 ஆட்டோக்களில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து, விறகு அடுப்புகளில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் சுவையான பொங்கல் வைத்த வெளிநாட்டினருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்