தமிழக செய்திகள்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) காலமானார்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன்(87) இன்று காலமானார்.


சென்னை,

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்,சேஷன் காலமானார். அவருக்கு வயது 87.

முன்னதாக டி.என்,சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த 1990-96 காலகட்டத்தில் பதவி வகித்தார். நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். தலைமைத் தேர்தல் ஆணையராக இவர் பதவி வகித்தபோதுதான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. அதேபோல், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் இவரது பதவிக் காலத்திலேயே விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வயதுமூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் டி.என்,சேஷன் இன்று காலமானார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்