தமிழக செய்திகள்

20 ஆண்டுகளுக்கு முன்பே சைபர் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த சென்னை போலீஸ் - முன்னாள் டிஜிபி விஜயகுமார்

20 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை போலீஸ் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததாக முன்னாள் டிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

20 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை போலீஸ் சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததாக முன்னாள் டிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் பிரகாஷ் வழக்கு குறித்து பேசினார்.

அப்போது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து பிரகாஷ் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததால், அதை நிரூபிப்பதற்கு அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால், முழுமையான ஒத்துழைப்பு வழங்காமல் தகவல்களை தர மறுத்ததாகவும் கூறினார்.

மேலும், தற்காலிக தகவல் தொழில்நுட்ப வல்லுநரை வைத்தே அதனை கண்டுபிடித்து, தண்டனை வாங்கி கொடுத்தது சென்னை போலீஸ் தான் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்