தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு

எஸ்.பி.வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலர்களுடன் பெஞ்சமின் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்;

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுரவாயல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார். இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் வெற்றி பெற்றார். பெஞ்சமின் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதிமுக படு தோல்வி அடைந்து இருப்பதால் கட்சியில் தற்போது பிளவு ஏற்படுள்ளது. எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி என இருதரப்பாக எம்.எல்.ஏக்கள் பிரிந்துள்ளனர்.

இதில் எஸ்.பி.வேலுமணி தரப்பை சார்ந்த பலரையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதில் பெஞ்சமின் பெயரும் இடம் பெற்றிருந்தது. குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்த தன்னை நீக்கியிருப்பதாகவும் நான் என்ன தவறு செய்தேன் எனவும் பெஞ்சமின் நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்தித்து பேசியுள்ளார்.