கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான அவரைத் தொடர்ந்து தேடிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு போலீசார் சென்னை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அவரது வீடு மற்றும் விடுதியில் வைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

சென்னையில் இருந்து அடையாறு காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீசார் இன்று காலை அவரை போலீஸ் வேனில் மதுரைக்கு அழைத்து வந்தனர். 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீசார் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர்.

வீட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான செல்போன் ஒன்றைக் கைப்பற்றியதாகவும், மதுரை லேக்வியூ பகுதியிலுள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்ட நிலையில், ஓரிரு காரணங்களால் அங்கு அழைத்துச் செல்லாமல், மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை