முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னையிலும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் அளித்த 2 புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர், உறவினர்கள், பங்குதாரர்கள் என மொத்தம் 17 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை எம்.எல்.ஏ விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.