முன்னாள் அமைச்சர் வேலுமணி டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நிரூபிக்கும் வகையில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளன என்பதை அறப்போர் இயக்கம் வலுவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணிக்கு தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தி உள்ளது. ஆனால் அவரோ சர்வ சுதந்திரமாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து சத்ரு சம்கார யாகங்கள் செய்து கொண்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகி உள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் அவர் செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. எனவே இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அவரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.