தமிழக செய்திகள்

அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு..!

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுக்குழு கூட்டத்துக்கு வருபவர்கள் கார் நிறுத்தும் கார் பார்க்கிங் பகுதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். கார்கள், வண்டிகள் நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் உள்ளதா என்பது போன்ற பல்வேறு அம்சங்களை முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து