தமிழக செய்திகள்

'முன்னாள் எம்.பி. பெயரை சொல்லி மிரட்டல்'

கொடைக்கானலில், முன்னாள் எம்.பி. பெயரை சொல்லி மிரட்டுவதாக நடிகர் பாபி சிம்ஹா கூறினார்.

தினத்தந்தி

கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை கிராமத்தில், நடிகர் பாபி சிம்ஹா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை பகுதியில், எனக்கு சொந்தமான இடத்தில் என்னுடைய பெற்றோர் வசிப்பதற்காக ஒரு வீடு கட்டி வருகிறேன். இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளேன். நான் அரசு விதிகளை மீறவில்லை.

ஒப்பந்த அடிப்படையில், வீடு கட்டுவதற்கான மொத்த தொகயையும் கட்டிட காண்டிராக்டரிடம் கொடுத்தேன். ஆனால் அவர், தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கட்டிட பணியை முடிக்கவில்லை. தற்போது மேலும் ரூ.40 லட்சம் கேட்டு வருகிறார். இதைத்தவிர முன்னாள் எம்.பி. ஒருவரின் பெயரை கூறி என்னை அவர் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும், நடிகர் ராமச்சந்திர ராஜூவும் யாரையும் மிரட்டவில்லை.

இவ்வாறு பாபி சிம்ஹா கூறினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?