தமிழக செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவால் கடந்த ஜூன் 11ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வாஜ்பாய் உடல் நிலை குறித்து நலம் விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு தேசிய தலைவர்கள் இன்று வந்தனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று 2வது முறையாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல்நலம் பற்றி கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று மாலை 5.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி வாஜ்பாய் மரணம் அடைந்து விட்டார். இதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாஜ்பாய் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...