சென்னை,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவருடன் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அவரது உடல்நிலை குறித்து கூடுதல் தகவலை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளன.