சென்னை,
முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) இன்று காலமானார். முன்னதாக உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜஸ்வந்த் சிங், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீ. ஜஸ்வந்த் சிங் ஜி இறந்ததைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மத்திய அமைச்சராக இருந்தபோது தீர்க்கமான முடிவுகளை எடுத்தவர். ராணுவத்தில் பணியாற்றிய ஜஸ்வந்த் சிங், சிறந்த அரசியல் அனுபவமும் கொண்டவர். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.