தமிழக செய்திகள்

ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

கடையம் அருகே ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

கடையம்:

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் மேலூர் பகுதி பொதுமக்கள் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தெடங்கி வைத்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் பூதப்பாண்டி, பேரூராட்சி தலைவர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணி அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்