தமிழக செய்திகள்

பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 பேர் காயம்

பிராட்வே பஸ் நிறுத்தத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

சென்னை பிராட்வே பஸ் நிறுத்தத்தில் உள்ள பழமைவாய்ந்த மரத்திலிருந்து பெரிய மரக்கிளை நேற்று காலை திடீரென முறிந்து விழுந்தது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இதில் காயத்ரி மற்றும் வசந்தா என்ற 2 பெண்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், அங்கு நின்று கொண்டு இருந்த அரசு பஸ் கண்டக்டர் சுதாகர் மற்றும் டிரைவர் பாஸ்கர் என்பவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் 4 பேரும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த தகவலை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மரக்கிளையை வெட்டி அகற்றினார்கள். இதனால் பிராட்வே பஸ் நிறுத்தத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை