தமிழக செய்திகள்

ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட 4 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட 4 தமிழர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி,

ஆந்திராவில் திருப்பதியை அடுத்த ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மர கட்டைகளை வெட்டி சிலர் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என ஆந்திர காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவல் துறையினர் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் செம்மர கட்டைகளை வெட்டி கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் காவல் துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து செம்மர கட்டைகள் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை, மாணிக்கம், சிவகுமார் மற்றும் சேகர்பாபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்