கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

எல்லை மீறும் பிராங்க் வீடியோக்கள்... சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னையில் பிராங்க் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் யூடியூப் சேனல்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை,

பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனல்களை முடக்கி, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரோகித என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், முதியோர்கள் மற்றும் பெண்களை துண்புறுத்தும் வகையில் சில யூடியூப் சேனல்கள் பிராங்க் வீடியோக்கள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழ் கலாச்சாரம் சீரழிந்து பலர் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவதாகவும், இதுபோன்ற சேனல்களை உடனடியாக நீக்கி சம்மந்தப்பட்டவர்களை கைதுசெய்ய வேண்டும் எனவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.   

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்