தமிழக செய்திகள்

சினிமா நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி - 2 பேர் கைது

சினிமா நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி பல்வேறு தவணைகளில் ரூ.17 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளனர். இது சம்மந்தமாக அஜித்குமார் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களான விருதாச்சலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுதாகரன் (வயது 23) மற்றும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த புகழேந்தி (22) ஆகியோரை செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நேற்று செங்கல்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் - 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோர்ட்டு காவலில் அடைத்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்