தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் ரூ.6 லட்சம் மோசடி

மூதாட்டியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரில் கே.என்.ஆர். பிளாட்ஸ் என்ற பெயரில் முருக்கன் நிறுவனம் நடத்தி வந்தார். இதன் மேலாளராக குமார் இருந்தார். இவர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 3 மடங்கு லாப தொகை திருப்பி செலுத்தப்படும் என பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறியுள்ளனர். இதனை நம்பிய முஸ்பிரா பானு (வயது 61) என்பவர் ரூ.6 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர்கள் லாப தொகையை கொடுக்காமலும், முதலீடு செய்த பணத்தை கொடுக்காமலும் மோசடி செய்துவிட்டனர். மேலும் அந்த நிறுவனத்தை நேரில் சென்று பார்த்தபோது பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்து முஸ்பிரா பானு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கே.என்.ஆர்.பிளாட்ஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர் யாரேனும் இருப்பின் திருச்சி மன்னார்புரம் காஜாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்