தமிழக செய்திகள்

10 பேரிடம் ரூ.13½ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் வேலை

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் சுதாகர்(வயது 30). இவரிடம், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி நாமக்கலை சேர்ந்த தஸ்தகீர்(31) என்பவர் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வாங்கியுள்ளார்.

இதேபோல சுதாகரின் நண்பர்கள் 9 பேரிடமும் வேல வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி சிங்கப்பூரில் வேலை வாங்கி தராமல் தஸ்தகீர் இழுத்தடித்து வந்துள்ளார்.

வாலிபர் கைது

இதனால் 10 பேரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டும், தஸ்தகீர் பணத்தை தரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதாகர் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் வழக்குப்பதிவு செய்து தஸ்தகீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை